Sunday, January 14, 2018

தினமணி வைத்தி..வைரமுத்துவை பேஷா வச்சு செஞ்சுட்டார் போங்கோ!

புராணங்களுக்குள் செல்ல விருப்பமில்லை. சென்றாலும் புராணத்தில் சொல்லப்பட்டவை எல்லாம் நாம் சொன்னால் அவர்கள் கோபித்து கொள்வார்கள். அந்த காலத்தில் எழுதிய புராணத்திற்கு இந்த காலத்தில் கதா காலட்சேப  மேதைகள் அறிவியல் விளக்கம் கொடுப்பார்கள். அந்த கருமத்தை நாம் ஏற்றுக் கொள்ளவேண்டும். புராணம் எழுதியவர்களை விட இந்த புண்ணாக்கு வியாபாரிகளான கொளுக்குடி  கருப்பாயி, வெல்லக்கட்டி ஸ்ரீநிவாசனுக்கு தான் அறிவு அதிகமோ?

சில கேள்விகள்:
மைலாப்பூரில் தலையில் இருந்து பிறந்தவர்கள் வைரமுத்துவுக்கு எதிராக மட்டும் போராட்டம் நடத்தியதில் அர்த்தம் உண்டு; சௌகரியமாக தினமணி வைத்தியை விட்டு விட்டார்கள். விறல் சூப்பும் குழந்தைக்கு கூட தெரியும்...நூறு விழுக்காடு பொறுப்பு ஆசிரியர்க்கு மட்டும் உண்டு என்று.  வைத்திக்கு வைர முத்துவின் எழுத்தில் நூறு விழுக்காடு ஆசி உண்டு என்று அர்த்தம்.

 மற்ற அறிவு ஜீவிகள்...வைகோ, பாரதிராஜா, வீரமணி, ஸ்டாலின்...ஏன் வைத்தியை குற்றத்தில் இருந்தது தப்ப விட்டார்கள்?

வழக்கு பதிவு செய்த போலீஸ்  வைத்தியை ஏன்  விட்டு விட்டார்கள்? வைத்தி மீது  தான் முதலில் வழக்கு பதிவு செய்து இருக்க வேண்டும்... ஆசிரியர் என்ற முறையில். என்ன எழவு எழுதினாலும் வைத்தி அச்சில் ஏற்றுவார்களா---ஆசிரியர் என்ற முறையில் உடன்பாடு  இல்லாமல்? 

....ஒருவேளை இது பட்டைக்கும் நாமத்திற்கும் பல காலமாக நடக்கும் சண்டையின் தொடர்ச்சியா?...

வைர முத்துவுக்கு  கூட ஆசிரியரை துணைக்கு இழுக்க தெரியவில்லையா? இதுக்கும் ஞான பீடை தான் காரணமா? இன்ன பிற  அறிவு ஜீவிகள்... வைகோ, பாரதிராஜா, வீரமணி, ஸ்டாலின்...ஏன் வைத்தியை குற்றத்தில் இருந்தது தப்ப விட்டார்கள். வருமான வரி பயமா?

பின்ன என்ன இழவுடா? சொல்லுங்க அம்மா, ஐயா...சொல்லுங்க?

பின் குறிப்பு:
வைத்தி தான் தினமணி பத்திரிக்கையின் ஆசிரியர். In  other  words... தினமணி பத்திரிக்கையின்  ¨Editor¨  பத்திரிக்கையில் வரும் செய்திகளை, மாற்றவோ அல்லது ஏன்  முழுவதாக நீக்கவே முழு  அதிகாரம் படைத்ததவர். எப்படி  கடவுளை ¨அவனின்றி ஓர் அணுவும் அசையாது¨ என்று சொல்வது போல, ஒரு பத்திரிகையில் சர்வ வல்லமை படைத்தவர் ஆசிரியரே--அதாவது... ¨Editor¨ இங்கும் எடிட்டர் இல்லாமல் ¨ஓர்  அணுவும் அசையாது ஆகவே இந்த எல்லா கூத்துக்கும் பொறுப்பேற்கவேண்டியர் எடிட்டர் வைத்தியே -- வைரமுத்து அல்ல!

8 comments:

  1. நம்பள்கியின் வலைதளம் மீண்டும் வந்தது மகிழ்ச்சி.
    மதங்களின் மீது கருத்து வைப்பவர்கள் மிரட்டபடுவது ஏற்க முடியாது.

    ReplyDelete
  2. வைர முத்து எழுதியது தவறு என்றால் அதை பதிப்பித்த ஆசிரியருக்குதான் கண்டணங்கள் தெரிவிக்கவேண்டும். ஆனால் அதை அப்படியே சோற்றில் பூசணிக்காயை அமுக்குவது போல அமுக்கிவிட்டார்கள்.. வைர முத்துமேல் வழக்கு பதிந்தவர்கள் வைத்தி மீது எத்தனை வழக்கு பதிந்தார்கள் என்று பாருங்கள்...அப்போது தெரியும் இவர்களின் வேஷங்கள்

    ReplyDelete
    Replies
    1. Thanks for your comments...It is pity that no press discusses this aspect of Dinamani Vaithiyanathan. Shame!

      Delete
  3. இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. நீண்ட நாள் காணாத உங்களை வர வைத்தவர் வைரமுத்து ! அவருக்கு நன்றி!

    ReplyDelete