Saturday, December 20, 2014

கடவுளுக்கு உண்மையான ஒரு எளிய விளக்கம்..!

ஆன்மீகவாதிகள் கடவுளோட செக்ரெட்டரிகள் மாதிரி கடவுளிடம் பேசினா மாதிரி புளுகுவர்கள். கடவுள் செக்ரெட்டரிகள் அவசியம் படிக்கவேண்டும்!  நான் கூறும் இரண்டு நிகழ்சிகளை கேளுங்கள்; பிறகு, நீங்களே கடவுளைப் பற்றிய முடிவுக்கு வாருங்கள்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, மலையாள தேசத்தை சேர்ந்த ஒரு சமையல்காரன் ஊரை விட்டு தமிழ் நாட்டுக்கு வந்து கொண்டு இருந்தான். கடவுள் நம்பிக்கையும் அவனுக்கு அதிகம்; "கடவுள் அனுக்கிரகமும் உண்டு" என்று சொல்லிகொள்வான். இரவு வந்து விட்டது. அங்கு ஒரு கிராமத்தில் ஒரு வீட்டிற்கு சென்று அங்குள்ள திண்ணையில் அமர்ந்தான். அவனுக்கோ நல்ல பசி. வீட்டு சொந்தக்காரனிடம் பேசிக்கொண்டே, பேச்சு வாக்கில் அவர்களுக்கு அவியல் செய்யத் தெரியுமா என்று கேட்டு இருக்கிறான். அவர்கள் தெரியாது என்று சொன்ன போது, தன்னிடம் ஒரு அவியல் கல் இருக்கு என்று சொல்லி, தான் அவர்களுக்கு அந்த கல் மூலம் அவியல் செய்து தருவதாக சொன்னான். அவியலுக்கு வேண்டிய எல்லா பொருட்களையும் அவர்களை வாங்கி வர செய்தான். இந்த அவியில் கல்லையும் முதலில் இருந்தே எல்லா காய்கறிகளுடன் சேர்த்து நன்றாக கொதிக்கவைத்து அவியல் செய்முறைப்படி அவியல் செய்தான். எல்லோரும் நன்றாக சாப்பிட்டார்கள். 

அடுத்த நாள் காலையில் அவன் ஊருக்கு செல்லப் போகுமுன் அந்த கிராமத்தான் அந்த அவியல் கல்லை விலைக்கு கேட்டான். அவனும், அதை நல்ல விலைக்கு வித்தான். பிறகு, அடுத்த நாள் அடுத்த ஊருக்கு சென்று இரவு தங்கும் போது, மற்றொரு கிராமத்து வீட்டின் முன்பு உள்ள ஒரு கூழாங்கல்லைப் பொருக்கிகொண்டான். அவர்களுக்கும் அன்றிரவு அவியல் தான் என்று சொல்லவும் வேண்டுமா என்ன? இது ஒரு கதை. நிற்க. அடுத்ததைப் பாப்போம்...

ஆன்மீகவாதிதகளுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கு. அவர்கள் கோவிலுக்கு செல்கிறார்கள். வீட்டிலும் கும்பிடுகிறார்கள். கடவுளைப் பார்த்தது உண்டா என்று கேட்டால் அவர்கள் கடவுளைப் பார்த்தது இல்லை என்பார்கள். மேலும், கடவுள் எப்பவும் நேரா வரமாட்டார் என்பார்கள் (ஒரு வேளை ஓரமா வருவார் போல; எவன் கண்டான்!). இந்த ஆன்மீகவாதிகள், அவர்களுக்கு குழந்தை [பிறப்பதற்கும்] பிறந்ததற்கும், குழந்தைக்கு பேர் வைக்கும் போதும் கடவுளை கும்பிடுவார்கள். பிறகு, பள்ளியில் சேர்க்கும்போது, பரீட்சை எழுதும் போது, வேலைக்கு, நேர்முகத் தேர்வுக்கு போகும் போது, கல்யாணம் செய்யும் போது, முதல் இரவில் 'அதை செய்ய துவங்கும் முன்பு....இப்படி எல்லாவற்றிக்கும் அவர்கள் கடவுளை துணைக்கு அழைத்துக் கொள்கிறார்கள்.  

நல்லது நடந்தால் அது கடவுள் அருள் நமக்கு இருந்தது என்று கடவுளுக்கு நன்றி கூறுவார்கள். இல்லை நினைத்தது நடக்கவில்லை என்றால் கடவுளைத் தவிர மீதி காரணங்களை குறை கூறுவார்கள். உதாரணாமாக, சகுனம், நேரம், ஜாதகம், விதி, பூர்வஜென்ம பலன் இத்யாதி இத்யாதி...இப்படி பல காரணங்களை தேடுவார்கள்--இவைகள் எல்லாம் மேலை நாடுகளில் இல்லை. இவைகள் இந்து மதத்தின் சொத்துக்கள். சிலர், அவர்கள் நினைத்தது நடக்கவில்லை என்றால் "கடவுள் என்னா பண்ணுவாரு! நீ சரியா படிக்கவில்லை! இல்லை  எல்லோருக்கும் வேலை கிடைத்து விடுமா என்ன?" என்று நீட்டி முழக்கி வியாக்யானம் பேசுவார்கள். சரி! இதற்கும் முதல் கதைக்கும் என்ன சம்பந்தம். ரொம்ப சிம்பிள்! இந்த கதை ஒரு பக்கம். நிற்க..

அவியலுக்கும் கூழாங்கல்லுக்கும் (so-called அவியல் கல்) என்ன சம்பந்தம்? கடவுளுக்கும் நமக்கு கிடைக்கும் பலன்களுக்கும் என்ன சம்பந்தமோ அதே சம்பந்தம் தான்--ஒன்றும் கூட குறைச்சல் இல்லை. அப்படியே தான். சுருங்க சொன்னால், கடவுளும் ஒரு அவியல் கல்லே! எப்படி அவியல் செய்வது அதன் மூலப் பொருட்களைப் பொறுத்ததோ, அதே மாதிரி வாழ்கையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் வெற்றி தோல்விக்கும் நீங்கள் தான் காரணம்.  அவியல் நன்றாக வந்தால் கடவுளுக்கு காணிக்கை அல்லது நன்றி செலுத்துவது எவ்வளவு மடத்தனமோ அதற்கு கொஞ்சமும் குறைவில்லாதது தான்---உங்கள் வாழ்கையில் நீங்கள் அடையும் வெற்றிக்கு கடவுளுக்கு காணிக்கையோ அல்லது நன்றியோ செலுத்துவது!

அவியல் நன்றாக வரவில்லை என்றால் நீங்கள் அவியல் கல் மீதா குற்றம் சொல்லப் போகிறீர்கள்.  எண்ணெய் பழைய எண்ணெய் ஒரே சீக்கு நாத்தம், முருங்கக்காய் முத்தல், ஓவரா புளிச்ச தயிரு, கல் உப்பு இல்லை தூள் உப்பு இப்படி பல நினைக்கவே முடியாத நொண்டி சாக்குகளை சொல்வீர்கள். ஏன் ஈர விறகு என்றும் அவியல் நன்றாக கொதி வரவில்லை என்றும் அதான் அவியல் சரியாக வரவில்லை என்றும் கூட சொல்வீர்கள். அவியல் நன்றாக வந்தால் அதற்கு காரணமான  எல்லா [நல்ல] மூலப் பொருள்களையும் நீங்கள் மறந்து, "எப்பா சாமி! செம்ம அவியல் கல்லுமா! அவியல் சூப்பர்னா சூப்பர்! -கல்லுன்னா  அதான் கல்லு" என்பீர்கள்.

அதே தான் உங்கள் கடவுளுக்கும்...!
எல்லாம் நல்லா நடந்தால்...கடவுள்;  இல்லை அப்படி நடக்க வில்லை என்றால்...மேலே சொன்ன இந்து மதக்குப்பைகள் -அதாவது...சகுனம், நேரம், பூர்வஜென்மம், புண்ணியம் இத்யாதி மற்றும் மேலே சொல்லாத பல இந்து மத குப்பைகள் தான் காரணம் என்றும் சொல்வீர்கள்!

அவியல் செய்யத் தெரியும் என்று மற்ற கிராமத்தான்கள் சொன்னால்? சொன்னால் என்ன அசர ஆளா அவரு!  நம்ம ஆளு, "நோ ப்ராப்ளம் சர்! என்கிட்டே சாம்பார் கல், ரசக்கல், மோர்கூட்டுக ல்,, மோர்க்குழம்பு கல், குருமா கல் இப்படி எல்லா கல்லும் பேஷா இருக்கு" என்று சொல்லி அவைகளை செய்து கொடுத்து ஏமாத்துவார். நம்ம ஆளு என்ன? கொக்குபா!

பின்குறிப்பு:
அவியல் கல் = ஆன்மீகவியாதிளின் கடவுள்!
ரசம், சாம்பார், குருமா,  மோர்கூட்டு, மோர்க்குழம்பு = மற்ற மதக் கடவுள்கள்! கல்கள் இருக்கும் வரை ஆன்மீகவியாதிகள் எந்த கடவுளையும் உருவாக்குவார்கள்! முட்டாள் இருக்கும் வரை மோர் சாதத்திற்கு மழுமை உண்டு மாதிரி!

பின்குறிப்பிற்கு பின்குறிப்பு:
மேலே சொன்ன வழிப்போக்கன் மற்றும் சமையல்காரன் "இந்து மதத்தில்" யார்? மக்களை ஏமாத்தினது பத்தாமல் தட்சணையும் வாங்குபவர்கள் இவர்கள்??கடவுளைப் பற்றிய என் விவாதம் சரி என்றால், ஒட்டு போடுங்கள்! தமிழ்மணம் மகுடம் ஏற்றுங்கள்!