Wednesday, January 30, 2019

தமிழை தாய்மொழியாக கொள்ளாத இவர்கள் மயக்கும் குரலுக்கு ஈடு ஏது?

இவர்கள் தமிழ் உச்சரிப்பு பிரமாதம்! வல்லினம், மெல்லினம், இடையினம் தெரிந்த இவர்கள் லகர, ளகர, ழகர உச்சரிப்பு அற்புதம். இவர்கள் தாய் மொழி தமிழ் இல்லையாம். மேலும் இந்த இரண்டு பாடல்களும் மனதை மயக்கும் தன்மை கொண்டது--My all time favorites! பாடல்கள் வீடியோ கீழே!

அந்தோ பரிதாபம்! நம் தமிழ் நாட்டில் முக்கால்வாசி தொலை காட்சிகளில்  செய்தி வாசிப்பவர்கள்  பலருக்கு தமிழ் மொழியின் பெருமையாம் வல்லினம், மெல்லினம், இடையினம் என்றால் என்ன என்று தெரியவில்லை.  சோகம்! இதில் கொடுமை லகர, ளகர, ழகர உச்சரிப்பு தெரியாமல் செய்தி வாசிப்பது மட்டுமல்லாமல், பல நிகழ்ச்சிகளுக்கும், " anchor -நடு நிலையாளர்" என்ற கொடுமை வேற!

PS: 
உடனே நினைவுக்கு வரவில்லை! ஆனால்,  News 18--ல்  இருக்கும் திரு. குணசீலனுக்கு உடனே தமிழ் கற்றுத் தரவேண்டும்அவருக்கு வல்லினம், மெல்லினம், இடையினம் என்றால் என்ன என்று சுத்தமாக தெரியவில்லை.  லகர, ளகர, ழகர உச்சரிப்பும் படு சுத்தம்...இப்படி இருந்தால்  எப்படி தமிழ் வளரும்?

தமிழை வளர்க்க என்ன செய்யவேண்டும் என்று விவாதம் வைத்தால் இவரை
 "anchor -நடு நிலையாளராக" போடக்கூடாது! அதில் அவர் கலந்து கொள்ளக்கூடாது....து தான் அவர் தமிழுக்கு செய்யும் மிகப் பெரிதொண்டு 

அந்த மனதை மயக்கும் தமிழை தமிழாக பாடும் பாடல்கலின் வீடியோ  இதோ...

ந்த இரண்டு பாடல் காட்சிகள் படு குப்பை;  திராபை சகிக்கலை! 

ஆனால்.....பாடல்களோ வைரம்  ---Great ; 
அதுவும் இரண்டாவது பாட்டின் பெண்  குரல்....too good!