Sunday, November 11, 2018

குவிந்திருக்கும் 88000 டன்கள் அமெரிக்க அணுக்கழிவுகளை ஒழிக்க ஒரு யோசனை!

பார்க்க வீடியோ: 20% மின்சாரம் மட்டுமே அணுவில் இருந்து அமெரிக்காவில் உற்பத்தியாகிறது! இங்கு குப்பைகளை [மருத்துவ கழிவுகள் தவிர] வேறு மாநிலத்திறிற்கு அனுப்பி [இழப்பீடு கொடுத்து] அழிக்கலாம். ஏழை மாநிலங்கள் அவைகளை பண வரவிற்க்காக வாங்கி அழிக்கும்.

பின்னே...மருத்துவ கழிவுகளை என்ன செய்யாலாம் என்று யோசித்தபோது...
இரண்டு இந்தியர்கள் [ இந்தியாவின் மேற்கு மாநிலத்தை சேர்ந்தவர்கள்} வாங்கி--அதை அழிக்க ஒரு டன்னுக்கு இவ்வளவு டாலர்கள் நஷ்டஈடு என்று பணம் வாங்கிக் கொண்டு, நம் தமிழ் நாட்டில் உள்ள தூத்துக்குடி துறைமுகத்திற்கு அனுப்பினார்கள். அப்புறம் என்ன ஜாம் ஜாம் என்று மருத்தவ கழிவுகள் மற்றும் இப்போ E- Waste எல்லாம் இங்கு வருகிறது. தூத்துக்குடி துறைமுகம் எல்லா கசுமால குப்பைகளை  கொட்டுவதற்கு என்றே உருவாக்கப்பட்ட துறைமுகம்.

ஏற்கனவே கேரளாவில் உள்ள கோழிப்பனண்ணையின் கழிவுகளை பாலக்காடு வழியாகவும், நாகர்கோவில் வழியாகவும் தமிழ் நாட்டில் வந்தது கொட்டி விட்டு போகிறார்கள். கேராளாவில் இந்த கழிவுகளை கொட்ட கம்யூனிஸ்ட் சேட்டன்கள் விடமாட்டர்கள். அப்ப...இருக்கவே இருக்கு தமிழ் நாடு, sorry, தமிழ் காடு...

எப்படி இதை செய்கிறார்கள்?

சோதனை சாவடிகளில் பணத்தை வெட்டினால் தூய தமிழன், காசை வாங்கிப் போட்டு கொண்டு கழிவுகளை தமிழ் நாட்டின் border area -வில் கொட்ட விடுவான். சரி! அங்குள்ள மக்கள் கொதித்து எழுந்தால், இருக்கவே இருக்கு நம்ம போலீஸ் மற்றும் கவுன்சிலர், MLA --க்கள் பொய் கேசு போட்டு அங்குள்ள மக்களை அச்சறுத்துவான்...

அமெரிக்கர்கள் தடுமாறுகிறார்கள்!
 எப்படி இந்த தேங்கிக் கிடைக்கும் 88,000 டன்கள் அமெரிக்க அணுக்கழிவுகளை அழிப்பது என்று பேய் முழி முழிக்கிறார்கள்...

அதானால், எனக்கு ஒரு யோசனை! 
அந்த யோசனை வரக்காரணம்.... 

லகத்தின் குப்பைத்தொட்டி இந்தியா! 
இந்தியாவின் குப்பைத்தொட்டி தமிழ் நாடு; 
தமிழ்நாட்டின் குப்பைத்தொட்டி தென் தமிழ்நாடு....
அப்புறம் என்ன?

PS:
டிரம்ப் அரசாங்கம் அணுக்கழிவுகளை yucca மலைகளில் சேமிக்கலாம் சென்று ஒரு bill  தயார் செய்கிறது; அதை அந்த மாநிலம் அனுமதிக்காது என்பது என் அனுமானம். இங்கு ஒவ்வொரு மாநிலமும் ஒரு நாடு மாதிரி....
மத்திய அரசு அவைகளை நம் நாடு மாதிரி ஆட்டுவிக்கமுடியாது....
அதனால்....டிரம்ப் அரசுக்கு என் ஆலோசனை...

------கொண்டாங்கடா அந்த அமெரிக்க அணுக்கழிவுகளை நம் தென் தமிழ்நாட்டில் கொட்டி அமெரிக்க மக்களுக்கு நன்மை செய்வோம்...