Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Tuesday, July 17, 2018

தமிழிசை ட்வீட்: கோபு-பாபு சேர்ந்ததால் தமிழகத்தில் பாஜகவின் பலம் கூடியது!

தமிழகத்தில் பாஜகவின் பலம் கூடியது. கோபு- பாபு கட்சியில் இணைந்தனர்--பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை ஒரு டிவீட் மூலம் தெரிவித்துள்ளார். 

சென்னை: தமிழ் திரைப்பட வசனகர்த்தாக்களான கோபு - பாபு ஆகியோர் இன்று பாஜகவில் இணைந்து விட்டனர். கட்சி விட்டு கட்சி தாவுவது அரசியலில் சகஜம். அதே போல துறை விட்டு கட்சி தாவுவதும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் திரைப்பட வசனகர்த்தாக்கள் என்ற பெயருடன் வலம் வந்த கோபு பாபு இன்று பாஜகவில் இணைந்து விட்டனர். இதுகுறித்து பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை ஒரு டிவீட் மூலம் தெரிவித்துள்ளார். பல்வேறு நாடகங்களுக்கு வசனம் எழுதிய இரட்டையர்தான் இந்த கோபுவும், பாபுவும். குறிப்பாக ஒய்.ஜி.மகேந்திரன் குரூப் டிராமாக்களுக்கு வசனம் எழுதியவர்கள்.

மேலும் படிக்க:
Read more at: https://tamil.oneindia.com/memes/gopu-babu-join-bjp-325032.html

பின்குறிப்பு:
எஸ் வீ சேகருக்கும் ஒய்.ஜி.மகேந்திரனுக்கும் உள்ள வித்யாசம் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்யாசம்: எஸ். வீ சேகர் பலருக்கு பிடிக்காதவாராக  இருக்கலாம்; ஆனால், எஸ். வீ சேகர் ஒரு சிறந்த காமெடியன். அதே சமயம் காமெடி எப்படி செய்வது என்ற அரிச்சுவடியே  தெரியாத ஒரு அம்மாஞ்சி ரம்பம் ஒய்.ஜி.மகேந்திரன். இவருக்கும் காமெடிக்கும் ஒரு சம்பந்தம் இல்லையெனும்  போது....இவர் "ரம்ப" நாடகங்களுக்கு வசனம் எழுதியவர்கள் இந்த கோபு- பாபு.

பின்குறிப்பிற்க்கு பின்குறிப்பு:
இவர்கள் சேர்ந்தது...பாஜக பலம் அடைந்தது என்று சொல்லும் Dr . தமிழிசை அவர்களே ரம்ப நாயகன் ஒய்.ஜி.மகேந்திரன் குரூப் டிராமாக்களுக்கு வசனம் எழுதலாம்.
Monday, July 9, 2018

வீடு வரை உறவு பாட்டை மேஜர் சுந்தர்ராஜன் பாடினால்...!?

கிண்டலும் கேலியும் கூடப்பிறந்ததால் சென்ற முறை அவ்வாறு செய்தேன்! இப்போ உண்மையாக TMS ரசிகர்களுக்கு ஒரிஜினல் வீடியோவை இணைத்துள்ளேன்! கூடவே, திருட்டுத்தனமாக  அமெரிக்காவில் குடியேறி மாட்டிகொண்ட பெற்றோர்களிடம் இருந்து அவர்கள் குழந்தையை பிரிப்பது தவறு என்று போராடி ஜெயிலுக்கு போன வெள்ளைக்கார democratic senator nominee.,..வீடியோ...

பெற்றோர்கள் "செய்த தவறுக்கு குழந்தைகளை பலி கடா ஆக்கக்கூடாது "என்று போராடும் [மனிதநேயம் கொண்ட] மனிதர்கள், அமெரிக்காவில் நூற்றுக்கு 90 விழுக்காடு (all மதம், nationality, all faith included). பெற்றோர்கள் செய்த தவறுக்கு (although illegal) அவர்களின் குழந்தைகளை தண்டிப்பது தவறு என்று போராடினார்கள்...அதனால் President Trump அந்த விதியை திரும்ப பெற்றுக்கொண்டார்.

நம்ம ஊரிலே இதே மாதிரி நடந்தா எப்படி இருக்கும் என்று நினைத்tதேன்! மண்டை காய்ந்தது தான் மிச்சம்! ஏனென்றால், இந்தியாவில், அதுவும் தமிழ்நாடென்றால் வாயிலே சுடுவார்கள்! 

இந்த சிறிய வீடியோவைப் பாருங்களேன்,,,,


TMS ரசிகர்களுக்காக ஒரிஜினல் வீடியோ....பின்குறிப்பு:
பாடல், இசை, TMS  குரல் எல்லாம் இந்த "வீடு வரை உறவு' பாட்டுக்கு மெருகூட்டுகிறது! நம்ம நடிகர் அசோகன் நடிப்பு எப்படி!?

நம்ம அசோகன் நடிப்பு  அந்த கால நடிப்பு OK--வாக இருந்தாலும், அவருக்கு ஒரு ரூபாய் கொடுத்து நடிக்க சொன்னால் நூறு ரூபாய்க்கு நடித்துக் கொடுத்துவிடுவார். அது அவர் குணம். இந்த பாட்டில் அப்படிப்பட்ட நடிப்பு!

நம்ம மேஜர் சுந்தர்ராஜனுக்கோ ஒரு ரூபாய் கொடுத்து நடிக்க சொன்னால் இருநூறு ரூபாய்க்கு நடித்துக் கொடுத்துவிடுவார். அதிலே கொடுமை என்னவென்றால்.....நூறு ரூபாய்க்கு தமிழிலும் பின்பு அதே [கருமத்தை] அரை குறை ஆங்கிலத்திலும் சொல்லி நம்மளை கொல்வார்.  

எவனோ மயிலாப்பூரில் அவரிடம் அது தான் அறிவு ஜீவிக்காண இலக்கணம் என்று கூறியிருப்பார்கள் போல. அதை அப்படி பிடித்து தொங்கிக் கொண்டார் சுந்தர்ராஜூனும் இயக்குனர் பாலசந்தரும். இயக்குனரும் அந்த கொள்கையை உடையவர் போல....பாலசந்தர் ஆசீர்வாதம் இல்லாமல் இது நடந்திருக்ககாது.

பாலசந்தர் படம் என்றால்., 1.66 ரூபாய் டிக்கெட்டில் இரன்டு மொழி படங்கள் பார்த்தது  மாதிரி இருக்கும்...மைலாப்பூர்வாசிகளுக்கு கொண்டாட்டம் ...அவர் படம் இல்லையோன்னா!? பின்னே அப்படிதான் கொண்டாடுவார்கள்.

பின்குறிப்பிற்கு பின்குறிப்பு:
பாலசந்தர் படமும் மேஜரின்  இரண்டு மொழி [B]போரும் "நம்ம[வா]ளுக்கு" கழுத்தில் இரண்டு பக்கமும் இரண்டு ப்ளேடு போட்டா மாதிரி ரத்தம் ஒழுகும்...சித்திரவதை! என்ன செய்யறது நான் வசித்த நகரும் மற்ற நம் உயிர் நண்ப-நண்பிகளுக்காக தாங்கிக்கொண்டுதானே ஆகவேண்டும் இந்த அறுவையை. அவர்களுக்காக, தாங்கிக் கொண்டேன் பாலசந்தர் பட அறுவைகளை...

என்ன பண்றது ஒய்!
நாமளும் படித்தது வளர்ந்தது மயிலாப்பூரா இருக்கும் போது....அட்ஜஸ்ட் பண்ணித்தானே போகணும் ஒய்.....!!!

Tuesday, July 3, 2018

வீடு வரை உறவு பாட்டின் புகழுக்கு காரணமே TMS தான்!

என் அளவீட்டில் இந்த பாடலின் புகழுக்கு  இரண்டாவது காரணம் மெல்லிசை மன்னர்கள்; மூன்றாவது தான் கண்ணதாசன். பட்டிணத்தார் பாடல்களில் இந்த பாடலின் முக்கிய கருத்துக்கள் இருப்பதாக சொல்லக் கேள்வி! கண்ணதாசன் ஒரு வார்த்தை சித்தர்; அதாவது ஒரே கருத்தை இசை அமைப்பாளர்கள் மெட்டின் மூலம் பல பாட்டுக்களை எழுதுவார்.

கண்ணதாசன் மாபெரும் கவிஞர் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. அவர் ஒரு பிறவிக்கவிஞர்!

வீடு வரை உறவு பாட்டை நீங்களும் கேளுங்கள்; "முதல் இரன்டு மூன்று வரிகளை நீங்கள் கேட்கும் போதே" இந்தப் பாட்டின் புகழுக்கு முழுக் காரணம் T.M.S என்று நீங்களே ஒத்துக் கொள்வீர்கள்....இந்த லிங்கை க்ளிக் செய்து பாட்டை கேளுங்கள்...

https://youtu.be/jsKHXhKvgFQ

இதே கருத்தொட்டிய மற்றொரு பாடல்: கண்ணதாசன் எழுதிT.M.S  பாடியது. இசை அவர்களே தான்!

கேளுங்கள்....1.40 to 2.05. 
கண்ணதாசன் ஒரு வார்த்தை சித்தர். அவர் எழுதிய பாடல்களில் இருந்த கருத்தை அவரே  மாற்றி வேறு மெட்டில் எழுதுவார்; எல்லா வரிகளும் அல்ல!

Kannadaasan is undoubtedly Great but T.M. Soundararjan gave "meaning" to his songs thro' many music directors. What a singer!

Sunday, June 17, 2018

ஜெமினி மற்ற 'பிரபல' நடிகர்களை விட சிறந்த No:1 நடிகர்.

ஜெமினி மற்ற 'பிரபல' நடிகர்களை போல over acting செய்யாத எதார்த்தமான நடிகர். அவர் மகள் Dr. கமலா மகாநதி படம் ஜெமினியை தவறாக காட்டியுள்ளது என்று சொல்கிறார்கள். ரசிகர்கள் முழு வீடியோவை  அவசியம் பார்க்கணும். கூடவே, Dr.கமலா வின் கருத்திற்கு  எதிராக YouTube comments-ல் நூற்றுக்கணக்கானவர்கள் எழுதியுள்ளார்கள். அதையும் படிக்கணும்.

வாசகர்கள் நீங்கள் தான் உண்மை எது என்று சொல்லவேண்டும்.  யாரையும் தவறாக சொல்லக்கூடாது உண்மை இல்லாத பட்சத்தில்.
Video credit  to Wetalkiess:பின்குறிப்பு:
மன்னிக்கவும்! இந்த விடியோவை எடுத்துவிட்டார்கள் போல...though I gave credit to the site Wetalkiess.

Anyway, I am providing a similar video found on the net, and the full video credit is given to "BehindwoodsTV." If still there is an issue with the video please, let me know.